ஆத்மா - Soul
மாணிக்கவாசகரை கண்ட குதூகலத்தில் மகாகவியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடார்களோ மக்கள்
சிறிது நாட்களுக்களுக்கு முன்னர், ஓர் தமிழ் வலைப்பூவில் ஓர் நண்பர், இந்த பாடல் தொகுப்பை பற்றி எழுதி இருந்தார். பாரதியார் பாடல்கள் சிலவற்றை, திரைப்படத்திலேயே கேட்டு இரசித்தபின், மற்ற பாடல்களையும், திரைப்பட வடிவம் இன்றி கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இன்று இப்பாடல் தொகுப்பை கேட்க முடிந்தது... கேட்டபின் தோன்றிய முதல் நினைப்புதான், மேலே உள்ள முதல் வரி.
பாரதி என்ற முன்னுரை இன்றி, இளையராஜா என்ற ஓர் முகவரி இருந்திருக்க வேண்டுமோ என்று நினைத்தேன்... 13 பாடல்கள்,
அதில் "காற்றே வா.." பாடலில் "பாம்பே" ஜெயஷ்ரியின் குரல் நம்மை அப்படியே நம்மை பாரதி விவரிக்கும் சூழ்நிலைகே இழுத்துச்செல்லுகின்றது, நல்ல வேளை இசை அதற்குத்தடையாக இல்லை ;-)
எந்த பாடலிலும், இசை என்பது பிண்ணணியில் ஒளிப்பது கூட சில நேரங்களில் மறந்து போய் விடுகின்றது, பாடகியின் குரலும், மொழிக்கு அவர் குடுத்திருக்கும் முக்கியத்துவமே இந்த தொகுப்பின் சிறப்பு.
இளையராஜாவின் (மாணிக்கவாசகரின் ?!) "திருவாசக"-த்திலாவது" என்னைப்போன்ற சில ஞான சூன்யங்களுக்கு, திரைப்படத்தில் ஒலித்த குரலையே நியாபகப்படுத்திக்கொண்டு பாடலை
ரசிக்க விடாமல் செய்தது, அது இந்த தொகுப்பில் இல்லை... ;-)
அங்கங்கே, தமிழ் உச்சரிப்பன்றி அதற்கு இணையான சமஸ்கிருத உச்சரிப்பு இருந்தத்தான் ஏன் என்று புரியவில்லை, ஒரு வேளை பாடகி சமஸ்கிருத பாடல்கள் அதிகம் பாடியதா ?
மொத்தத்தில், பாரதி அனைவரையும் சென்றடைந்து இருக்கவேண்டியது, ஏன் அடையவில்லை என தெரியவில்லை...
ஒரு வேளை கர்நாடக இராகத்தில் பாடியது ஓர் பிழையோ ?!?!
ஆனால்
அதில் தமிழ் பாடல் இருந்ததை அன்பர்கள் கவனிக்கவில்லையோ ??!?!